ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (16:20 IST)

‘காதலர் தினத்தில் காதலில் தோற்றவர்களுக்காக ஒரு பார்: குவியும் கூட்டம்

‘காதலர் தினத்தில் காதலில் தோற்றவர்களுக்காக ஒரு பார்
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் காதலர்கள் ஜோடி ஜோடியாக வீதிகளில் உலா வந்து காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். கடற்கரைகள், பூங்காக்கள், தீம் பார்க்குகள் மற்றும் சாலைகளில் காதலர்கள் கைகோர்த்து நடந்து செல்வதையும் ஹோட்டல்களில் காதலர்கள் கூட்டம் கூட்டமாக குறைந்து வருவதையும் பார்க்க முடிகிறது 
 
இந்த நிலையில் இதுவரை காதலிக்காத முரட்டு சிங்கிள்களும் காதலில் தோற்றவர்களும் காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களை ஏக்கத்துடன் பார்க்க வருகின்றனர். காதலர் தினம் இவர்களுக்கு ஒரு சோக நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காதலில் தோற்றவர்களுக்காக ஒரு பார் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா ’பிரேக் அப் பார்’ என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பாரில் காதலில் தோற்ற ஆண்களும் பெண்களும் குவிந்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த பாரில் வரும் கூட்டத்தை பார்க்கும் போது ஏகப்பட்ட நபர்கள் காதலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பது புரிகின்றது என்று இந்த பாரின் நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பார் காதலில் தோற்றவர்களுக்காக தொடர்ந்து இயங்கும் என்றும் காதலில் தோற்றவர்கள் தங்கள் மன அமைதியை தேடி இங்கு வரலாம் என்றும் பார் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது