வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (13:12 IST)

சூரியனில் பெரிய ஓட்டை; செயற்கோள்களுக்கு பாதிப்பு; நாசா எச்சரிக்கை

சூரியனின் மேற்பரப்பில் விழுந்துள்ள மிகப்பெரிய ஓட்டையால் பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது என நாசா எச்சரித்துள்ளது.


 
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம் சூரியனின் மேற்பரப்பை படம் பிடித்து ஆய்வு செய்தது. அதில் சூரியனில் பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சூரியனின் கந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஓட்டை வழியாக சூரிய வெப்பக்காற்று அதிவேகத்தில் வெளியேறுகிறது. வழக்கமான சூரிய காற்றை விட தற்போது ஏற்பட்டுள்ள ஓட்டையில் இருந்து சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிகவேகமாக வெளியேறுகிறது. இது பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்களுக்கும், சூரிய மின் சக்தி கருவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்வாறு சூரியனில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.