கருணை காட்டுமா கொரோனா?? 636 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..

Corona virus dead rate increased in china
Arun Prasath| Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:08 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல், தைவான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, உட்பட 23 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 31,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு உயிரிழப்புகள் அதிகமாவதால் சீன அரசு செய்வதறியாது திணறி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :