அமேசான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் தெரியுமா?
கொரோனா வைரஸ்: அமேசான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் தெரியுமா? - இதுதான் காரணம்
அமெரிக்கா நியூயார்க் கிடங்கில் பணியாற்றிய அமேசான் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். கொரோனா பெருந்தொற்று தொடர்பாக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி அமேசான் ஊழியர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். இதன் காரணமாகவே அந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியூயார்க் அட்டர்னி ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் தாங்கள் மேற்கொண்ட முடிவு சரியானது என வாதிடுகிறது.