1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (08:42 IST)

இளைஞர்களுக்கு இலவச ஆணுறை.. அரசின் அதிரடி அறிவிப்பு!

Condom
பிரான்ஸ் நாட்டில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரான்ஸ் நாட்டில் இளம் வயதில் கர்ப்பம் ஆகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து இதுகுறித்து அரசு ஆலோசனை செய்தது. 
 
இதனை அடுத்து எதிர்பாராத கர்ப்பம் மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதை குறைக்கும் முயற்சியாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச ஆணுறைகளை வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது 
 
அதுமட்டுமின்றி கருத்தடை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது
 
இதனால் தேவையில்லாத கர்ப்பம் குறையும் என்றும் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது
 
பிரான்ஸ் நாட்டில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Siva