பூமிக்கு அருகே சுருட்டு வடிவ விண்கல்; ஏலியனா இருக்குமோ?
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகில் கடந்து கொண்டிருக்கும் சுருட்டு வடிவ விண்கல் ஏலியனா இருக்குமோ என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன் பூமிக்கு மிக அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சுருட்டு வடிவில் இருக்கும் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த விண்கல் எரி நட்சத்திரம் போல் இல்லாமல் பறக்கும் விண்கல் போல் உள்ளது. இதனால் இது கண்டிப்பாக சூரிய குடும்பத்தை சேர்தவையாக இருக்கது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஒமுஅவுமா என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்கல் தற்போது மெல்ல மெல்ல பூமியை நெருங்கி வருகிறது. ஸ்டீபன் ஹாக்கிங் தலைமையிலான குழு இந்த விண்கல் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த விண்கல் ஏலியனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இதற்காக சில சிக்னல்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அந்த சின்கல்களுக்கு பதில் வரும் பட்சத்தில் ஏலியன் இருப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.