திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (21:39 IST)

வேற்றுகிரகவாசிகளின் நிஜ உருவம்: வைரலாகும் புகைப்படம்!!

வேற்றுகிரகவாசிகள் குறித்து பல செய்திகள் வெளியாகி கொண்டிருந்தாலும் அதில் பல செய்திகள் ஆதாரமற்றதாகவே இருந்தன.


 
 
இந்நிலையில் வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வேற்றுகிரகவாசி ஒன்றின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
பிரேசிலின் பெர்குமெட்ர் பகுதியில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
இதனால் அந்த பகுதிக்கு விரைந்த போலீஸார் நள்ளிரவில் எதோ ஒரு உருவத்தை கண்டுள்ளனர். அதனை புகைப்படமாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.  
 
அந்த புகைப்படத்தில் இருக்கும் உருவம் வேற்றுகிரவாசியாக இருக்கும் என சந்தேகித்துள்ளனர். அந்த வேற்றிகிரகவாசிக்கு நீண்ட கைகள் மற்றும் 3 விரல்களே இருந்துள்ளது. 
 
வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்தது எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.