திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam

ஒரே பைக்கில் 58 பேர் பயணம்: இந்திய ராணுவர்கள் சாதனை

ஒரு பைக்கில் எத்தனை பேர் செல்லலாம். இரண்டு அல்லது மூன்று நபர்கள் செல்வது வழக்கம். மிக அரிதாக சில சமயம் நான்கு நபர்களும் செல்வதுண்டு. இந்த நிலையில் ஒரே பைக்கில் 58 பேர் பயணம் செய்து ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.





இந்திய ராணுவத்தின் சரக்கு பிரிவை கையாளும் டொர்னேடோஸ் என்ற குழுவினர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர். பைக்கில் பயணம் செய்யும் வீரர்களின் எடையை சரிசமமாக பரவ செய்து மூன்று பேர் இணைந்து இந்த பைக்கை ஓட்டியுள்ளனர்.

ஏற்கனவே 19 வகையான சாதனையை கையி வைத்துள்ள இந்த டொர்னேடோஸ் குழுவினர்களின் 20வது சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.