செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (11:14 IST)

சின்ன பசங்களை சேத்துக்கிட்டா பயந்துடுவோமா? – தொடர்ந்து சீண்டும் சீனா!

ஜி 7 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை இணைப்பது குறித்து பேசியுள்ள சீனா “சிறிய கூட்டத்தால் சீனாவை அசைக்க முடியாது” என கூறியிருப்பது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு சீனா – அமெரிக்கா இடையேயான வாக்குவாதம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ காரணம் சீனாதான் என அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக அதற்கு வழங்கப்படும் நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் லடாக்கில் ஏற்பட்டுள்ள சீனா – இந்திய எல்லை விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை சாடி வருகிறது.

இந்நிலையில் ஜி7 அமைப்பில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஜி7 உறுப்பினர் நாடுகளாக இதுவரை அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவை ஜி7 நாடுகளின் அங்கத்தில் இணைக்க ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இதை தனக்கு எதிராக கூட்டம் கூட்டுவதாக சீனா கருதுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ”அமெரிக்காவின் திட்டம் எங்களுக்கு புரிகிறது. ஜி7 நாடுகள் அமைப்பு உலகத்தில் அமைதி நிலவுவது குறித்து சிந்திக்க வேண்டும். உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இந்த மாநாடு எந்த பரஸ்பர நம்பிக்கையின் மீதும் கட்டப்படவில்லை. எங்களுக்கு உலக நாடுகளின் ஆதரவு இருக்கிறது. இதனால் ஒரு சிறிய கூட்டம் சீனாவை எதிர்த்து செயல்பட முடியாது” என கூறியுள்ளார்.