வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (08:39 IST)

அமெரிக்காவில் உடைக்கப்பட்டது காந்தி சிலை! போராட்டக்காரர்கள் வன்முறை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாயிட் போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் தொடங்கியது. தற்போது போராட்டம் வன்முறையாக மாறி, அமெரிக்கா முழுவதும் 25க்கும் அதிகமான நகரங்களில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களோடு உள்ளே நுழைந்த நைஜீரிய அகதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போராட்டக்காரர்களே பலர் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை போராட்ட கும்பலில் சிலர் அடித்து உடைத்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்தபோது காந்தி கருப்பினத்தவர் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர். கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா காந்தியை ஈர்ப்பாக கொண்டே அறவழி போராட்டம் நடத்தி சிறை சென்று “ஆப்பிரிக்காவின் காந்தி” என்று அழைக்கப்படுகிறார். இப்படியாக அந்த மக்களின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தவரை அந்த மக்களே அடித்து உடைத்துள்ள சம்பவம் காந்திய வாதிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.