புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (08:37 IST)

ஏற்கனவே சொல்லிட்டோம்.. எங்க ஏரியா உள்ள வராதீங்க! – அமெரிக்க போர் கப்பலை விரட்டிய சீனா!

தென் சீன கடலில் நுழைந்த அமெரிக்க கப்பலை சீன ராணுவம் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீன கடலில் உள்ள தீவு பகுதிகளை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவு கூட்டங்களை ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதற்கிடையில் சீனா எதை செய்தாலும் எதிர்க்கும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக தீவு உரிமையில் மற்ற நாடுகளுக்கு சப்போர்ட் செய்து வருகிறது.

இதனால் அடிக்கடி அமெரிக்க போர்க்கப்பல்கள் தென் சீன தீவு கூட்டங்களிடையே போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் சமீபத்தில் சீனாவின் நான்ஷா தீவுக்கு அருகே போர் பயிற்சியில் ஈடுபட்ட யு.எஸ்.எஸ் ஜான் மெக்கெய்ன் என்ற போர்க்கப்பலை சீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியதாக சீனா தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.