செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:39 IST)

கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் பலி.. அச்சத்தில் மக்கள்

கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் நேற்று மட்டுமே 97 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.