புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (10:38 IST)

26 ஆவது இடத்தில் சீனா.,. மீண்டும் இயல்பு வாழ்க்கை- திறக்கப்பட்ட திரையரங்குகள்!

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய போது உலகமே சீனாவைப் பார்த்து பரிதாபப் பட்டது. ஆனால் அந்நாட்டு அரசின் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் இப்போது அந்த நாடு கொரோனா பாதிப்பில் 26 ஆவது இடத்தில் உள்ளது. சீனாவில் இதுவரை 83,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 4,634 பேர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக சீனாவின் தலைநகரான பெய்ஜீங்கில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மெல்ல சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதையொட்டி ஷாங்காய் மற்றும் ஹாங்ஃபூ, குய்லின் போன்ற பகுதிகளில் முதற்கட்டமாக நேற்று(ஜூலை 20) திரையரங்குகள் திறக்கப்பட்டன. அங்கு பார்வையாளர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சிக்குப் பின்னரும் திரையரங்கம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. விரைவில் மற்ற பகுதிகளிலும் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.