வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (09:09 IST)

இது பரவுச்சுன்னா ஆண்மை இழப்புதான்! – சிங்கிள்ஸை அலறவிடும் சீன பாக்டீரியா!

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் உருவாகியுள்ள புதிய பாக்டீரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் பலியாகியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலிலிருந்து உலகம் முழுவதும் மீளாத சூழலில் சீனாவின் புதிய பாக்டீரியா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடக்கு மாகாணங்களில் பரவி வரும் ப்ருசெல்லோசிஸ் என்ற இந்த பாக்டீரியா மனிதர்கள் மீது பரவி வாழ்நாள் முழுவதுமான பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பாக்டீரியா பரவும் நபர்கள் மால்டா காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தலைவலி, காய்ச்சல் உடல் சோர்வு ஏற்படும் என்பதுடன் உடல் உறுப்புகளில் வீக்கம் மற்றும் எலும்பு வலி போன்ற நிரந்தர பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இது எளிதில் மனிதர்களுக்கு பரவாது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.