1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (11:08 IST)

மீண்டு எழுந்தது சீனா: போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சீனாவை பார்த்து மற்ற நாடுகள் உஷாராவதற்கு முன்பே வேகவேகமாக உலக நாடுகள் அனைத்திலும் வேகவேகமாக பரவியது கொரோனா. ஆரம்பத்தில் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்திருந்தாலும் அதை தாண்டி இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகமான உயிர்பலிகளை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மூன்று மாத கால போராட்டத்திற்கு பிறகு சீனாவில் கொரோனா பரவுதல் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம்பெற்று திரும்பி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சீனாவில் சகஜநிலை மீண்டும் மெல்ல திரும்பி வருகிறது. இன்று முதல் ஹூபே மாகாணத்தில் அனைத்து வகையான போக்குவரத்துகளும் வழக்கமாக செயல்பட தொடங்கியிருக்கிறது.