கைமீறும் நிலை: 21 நாள் ஊரடங்கை நீட்டிக்க முடிவா?
நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. எனவே, இந்த 21 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளது மத்திய அரசு.
நாடு முழுவதும் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசுக்கு இல்லை. 21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தியே என மத்திய அரசு சார்பில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா தெரிவித்துள்ளார்.