1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (07:46 IST)

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்! அதிபர் ஜோபைடன் பாராட்டு..!

china balloon
சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்! அதிபர் ஜோபைடன் பாராட்டு..!
அமெரிக்காவில் பறந்த சீன பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதை அடுத்து ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜோபைடன் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்க வான்பரப்பில் சீன உள்வு பலூன் ஒன்று பறந்ததாகவும் அட்லாண்டி கடல் பகுதியில் இந்த பலூனை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. 
 
அமெரிக்காவின் மொண்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதலத்தின் மீது சீனாவின் ராட்சச உளவு பலூன் ஒன்று பறந்ததாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரபரப்பான தகவல் வெளியானது
 
இந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் ஏதேனும் பிரச்சனை வருமா என்று ஆய்வு செய்யப்பட்டது. இதனை அடுத்து பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டதை அடுத்து பென்டகன் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது
 
சீன பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் ஜோபைடன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு அமெரிக்காவின் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva