செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (18:22 IST)

காது, பற்கள், மூட்டு பகுதி நீக்கம்: குழந்தைகள் கொல்லப்பட்டத்தின் பின்னணி என்ன?

காது, பற்கள் மற்றும் மூட்டு பகுதி நீக்கப்பட்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி தான்சான்யா பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அந்த குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 
 
கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு வயது இரண்டிலிருந்து, ஒன்பதுக்குள்தான் இருக்கும். சில குழந்தைகளின் மூட்டு பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையின் காரணமாகவே இது நடந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அதாவது, குழந்தைகளின் உடல் பாகங்கள் செல்வத்தை கொண்டு வருமென சூனியக்காரர்கள் சொல்வதை கேட்டு குழந்தைகளை கொன்று உடல் பாகங்களை வெட்டி உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.