1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (15:55 IST)

நாளை முதல் அடுத்த ஆண்டு மாம்பலம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

traffic
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாளை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மாம்பலம் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாம்பலம் பிரதான சாலையில் சென்னை மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் அதாவது ஜனவரி 2023ஆ, ஆண்டு ஜனவரி 9 முதல் 2024 ஆம் தேதி ஏப்ரல் 7ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்த முழு விவரங்கள் இதோ: 
 
மாம்பலம்‌ பிரதான சாலையில்‌ தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல்‌ ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
 
மாம்பலம்‌ பிரதான சாலையில்‌ இருந்து கோடம்பாக்கம்‌ மேம்பாலம்‌ பக்கம்‌ செல்ல விரும்பும்‌ இலகு ரக வாகனங்கள்‌ தியாகராய கிராமனி சாலை சந்திப்பில்‌ தடை செய்யப்பட்டு,
மேற்கண்ட வாகனங்கள்‌ தியாகராய சாலை, வடக்கு உஸ்மான்‌ சாலை மற்றும்‌ ஹபிபுல்லா சாலை வழியாகவும்‌ செல்லலாம்‌.
 
மாம்பலம்‌ பிரதான சாலையில்‌ கோடம்பாக்கம்‌ மேம்பாலம்‌ பக்கத்திலிருந்து தி.நகர்‌ பக்கம்‌ செல்ல விரும்பும்‌ இலகு ரக வாகனங்கள்‌, ஹபிபுல்லா சாலை சந்திப்பில்  தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும்‌ வடக்கு உஸ்மான்‌ சாலை வழியாகவும்‌ செல்லலாம்‌.

Edited by Siva