வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 6 மே 2023 (18:43 IST)

3 ஆம் சார்லஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார்!

charles III
இங்கிலாந்து  நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் எலிசபெத் –II. இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி  காலமானார்.

இவரது மறைவை அடுத்து,,  இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா  இன்று (மே மாதம் 6 ஆம் தேதி) நடைபெற்றது.

இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை  ஏற்கனவே அறிவித்தது.

இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிசூட்டு விழாவுக்காக  இங்கிலாந்து அரசர்கள் 700 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாரானது.

இந்த நிலையில்,   இன்று இவ்விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில்,  முடிசூட்டில் விழாவிற்காக அரண்மனையில் இருந்து சார்லஸ், அவரது மனைவி கமீலா, ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு சென்றனர். பாரம்பரிய முறைப்படி, மன்னர் 3 ஆம் சார்லஸ் கையில் செங்கோல் தடி ஏந்தி அமர்ந்தார்..  இதையடுத்து, மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, ஆசிர்வாதத்துடன்,  புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபாதி ஜெகதீப் தங்கர்  நேற்று விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.