திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (20:25 IST)

கரப்பான்பூச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்... வைரல் வீடியோ

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் பிரசவம் பார்த்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு கரப்பான் பூச்சியை வளர்த்து வந்தார். இந்நிலையில், சில நாட்களாக அது முன்பு போல் இல்லாமல்  நடப்பது, ஒடுவதில்  பல சிரமங்கள் பட்டிருந்ததால், அவர், அந்த கரப்பான் பூச்சியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
 
அப்போது, கரப்பான் பூச்சியை பரிசோதித்த மருத்துவர், அது கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், அது விரைவில் குட்டி கரப்பான் பூச்சியை பிரசவிக்க உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.
 
மேலும், தற்போது கரப்பான் பூச்சி தவிப்பதே இந்தப் பிரசவத்திற்காகத் தான் என்பதை புரிந்து கொண்ட மருத்துவர், அதற்கு மயக்க மருந்து கொடுத்து,  சிசேரியன் செய்து அந்தக் கரப்பான் பூச்சி சிக்கலின்றி பிரசவிக்க உதவினார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.