வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (14:18 IST)

மது அருந்தும் கல்லூரி மாணவிகள்.. பரவலாகும் வீடியோ !

கல்லூரி மாணவிகள் நான்கு  ஆண் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து  மாணவிகளை கல்லூரி நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் 4 பேர், சீருடை அணிந்து கொண்டு, ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் இந்த நான்கு மாணவிகளையும் அதிரடியாக கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.