1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (11:16 IST)

புலம்பெயர்ந்தவர்கள் இல்லைனா அமெரிக்காவே இல்ல! – ட்ரம்ப்பை வாரிய சுந்தர் பிச்சை!

அமெரிக்காவில் பணி நிமித்தம் தங்கும் வெளிநாட்டினருக்காக வழங்கப்படும் எச்1பி விசா முறையில் ட்ரம்ப் சீர்திருத்தங்கள் அறிவித்துள்ளதற்கு கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அமெரிக்காவில் மக்கள் பலர் பலியாகி வரும் நிலையில் வேலைவாய்ப்புகளும் முடங்கியுள்ளன. இதனால் எச்1பி விசாவில் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பலர் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எச்1பி விசாவின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்கள் பணிகளை இழந்தால் 60 நாட்களுக்குள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது, இந்நிலையில் விசாக்கள் மீதான தடையை அதிபர் ட்ரம்ப் இந்த வருட இறுதி வரை நீட்டித்துள்ளது மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கூகிள் நிறுவன சி.இ.ஓ சுந்தர்பிச்சை ”புலம்பெயர்ந்து வந்தவர்களால்தான் அமெரிக்க பொருளாதாரம் வள்ர்ச்சியை அடைந்துள்ளது கூகிள் உள்பட. எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் புலம்பெயர் பணியாளர்கள் பக்கம் உறுதியா நிற்போம்” என கூறியுள்ளார்.