திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (08:36 IST)

வேடிக்கை பாக்க கூட யாரும் வரல; காலி மைதானத்தில் கால் கடுக்க பேசிய ட்ரம்ப்

அமெரிக்க தேர்தலுக்காக ட்ரம்ப் நடத்திய மாநாட்டில் மக்கள் யாருமே கலந்து கொள்ளாதது ட்ரம்புக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலி விரைவில் நடைபெற உள்ள சூழலில் அதிபர் ட்ரம்ப் தன் முதல் தேர்தல் கூட்டத்தை துல்சாவில் நடத்தினார். துல்சாவில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்த அதிகாரிகள் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனினும் துல்சா கூட்டத்தை நடத்துவதில் ட்ரம்ப் உறுதியாக இருந்தார்.

40 ஆயிரம் பேர் வரை தனது பேச்சை கேட்க வருவார்கள் என ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். இதுதவிர துல்சா மைதானத்திற்கு வெளியேயும் மக்களுக்கு உரை நிகழ்த்த ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். ஆனால் கூட்டத்திற்கு சென்ற ட்ரம்பிற்கு அதிர்ச்சி. 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில் வெறும் 25 பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்களாம். இதனால் அப்செட் ஆன ட்ரம்ப் உரையை சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு கிளம்பியுள்ளார். மைதானத்திற்கு வெளியே நடத்த இருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் கூட்டத்திற்கு மக்கள் வராதது அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.