செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2018 (21:04 IST)

சாலையிலிருந்து முதல் மாடிக்கு பறந்த கார்

கலிபோர்னியாவில் சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்று ஒரு கட்டிடத்தின் மாடிக்கு பறந்து சென்று விபத்துள்ளானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கலிபோர்னியாவில் ஒரு கார் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது சாலையை பிரிக்க நடுவில் இருக்கும் தடுப்பில் மோதி கார் ஒன்று அருகில் இருந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு பறந்தது. 
 
பல் மருத்துவமனையின் முதல் மாடியின் ஜன்னலில் சென்று சொருகியது. இதில் காரின் முன்பகுதி கட்டிடத்தில் மாட்டிக்கொண்டது. காரில் இருந்த இருவர் பத்திரமாக வெளியேறினர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.