திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜனவரி 2018 (17:46 IST)

40 பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து

மகாராஷ்டிராவின் தகானு கடற்கரையில் 40 பள்ளி மாணவர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 40 பேர் சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர்.  தஹானு என்ற பகுதியில் இன்று காலை கடலில் படகு சவாரி செய்ய முடிவு செய்த மாணவர்கள், பாதுகாப்பிற்கு லைஃப் ஜாக்கெட் கூட அணியாமல் படகில் சவாரி செய்துள்ளனர். கடலில் இருந்து சிறிது தூரம் சென்ற படகு எதிர்பாராத விதமாக மூழ்க்கியதில் 40 மாணவர்களும் தண்ணீரில் விழுந்தனர். 
 
தகவல் கிடைத்து உடனடியாக அங்கு சென்ற மீட்புத் துறையினர் 40 மாணவர்களில் 35 பேரை உயிருடன் மீட்டனர். இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டது. எஞ்சிய மாணவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் . நீரிறங்கு விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு உதவ அப்பகுதி மீனவர்கள் கடலில் படகுடன் சென்று மாயமான மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 
இந்த விபத்திற்கான முக்கிய காரணம் படகில் பயணம் செய்த 40 மாணவர்களில் பலர் படகின் ஒரு ஓரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது, படகு நிலை தடுமாறி கவிழ்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.