புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (17:43 IST)

ஆங் சாங் சூகிக்கு கனடா நாட்டுக் குடியுரிமை மறுப்பு...

கனட நாடாளுமன்றம்  மியான்மர் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெறுவதாக ஒருமனதாக வாக்களித்துள்ளது. சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு மியான்மரில் ரோஹிஞ்சா எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டு ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த,மியான்மரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூகிக்கு  1991ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டது.
 
ஐ.நா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மியான்மர் ராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
 
கடந்த ஓராண்டு காலமாக மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரை நாட்டை விட்டு  வெளியேறியுள்ளனர்.
 
கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூகிக்கு  இன்னும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா கேள்வி எழுப்பிய மறு நாளே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
 
கனடா கௌரவ குடியுரிமைகடந்த  2007ஆண்டில் ஆங் சான் சூகிக்கு வழங்கியது. இதைப் பெற்று கௌரவிக்கப்பட்ட ஆறு பேரில் சூச்சியும் ஒருவராக இருந்தார்.
 
கனடா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுத் தீர்மானம் மூலமே கௌரவக் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதே போன்றதொரு கூட்டுத் தீர்மானம் மூலம் மட்டுமே அதை திரும்பப்பெற முடியும் என்று கனேடிய அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.
 
அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ லெஸ்லி, வியாழக்கிழமையன்று  நடந்த வாக்கெடுப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
இந்த மாதத்தின்  தொடக்கத்தில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒரு மனதாக நிறைவேற்றியது.

மியான்மர் நாட்டின் செயல்முறைத் தலைவராக 2015இல் ஆங் சான் சூகி பொறுப்பேற்றார். மக்களாட்சி மீண்டும் நிறுவப்பட்டபின் அங்கு மியான்மர் ராணுவம் கொடூரமான வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்படும் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆங் சாங் சூகிக்கு தொடர்ந்து சர்வதேச அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், வன்முறைகள் நடக்கவில்லை என்று அவர் மறுத்து வருகிறார்.
 
சூகி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் ,கொண்டிருந்த போது ,அவர் ராணுவத்தினரால் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிரிந்தார், பின்பு சர்வதேச நாடுகளின் அழுத்த்தின் காரணமாக ராணுவத்தினர் அவரை விடுதலை செய்தனர்.அதன் பின் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி போட்டியிட்டு அந்நாட்டின் செயல்முறை தலைவராக ஆட்சி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.