திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (18:55 IST)

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா? சுப்பிரமணியன் சுவாமி

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி, 'சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சோபியா கனடாவில் படித்து வருவதாகவும், கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாகவும், கனடாவில் உள்ள தமிழர்கள்தான் 'பாசிசம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் சுவாமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே சோபியாவின் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவரை பின்னால் இருந்து ஏதோ ஒரு இயக்கம் வழிநடத்துவதாகவும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் கூறியுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தகக்து.