1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (12:01 IST)

மனைவியை பிரிகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. அன்பும், மரியாதையும் தொடரும் என அறிவிப்பு..!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியை பிரிய இருப்பதாகவும் இருப்பினும் தனது மனைவி மீதான அன்பும் மரியாதையும் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
 51 வயதான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 வயதான அவரது மனைவி சோஃபி என்பவரை பிரிகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 
 
சட்டப்படி இருவரும் பிரிவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நானும் என் மனைவியும் நீண்ட ஆலோசனைக்கு பின்னால் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். 
 
இருப்பினும் ஒருவருக்கு ஒருவர் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம். எங்கள் குழந்தைகளின் தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran