திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2023 (17:55 IST)

83 வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞர் ...2 ஆண்டில் விவாகரத்து!

83 வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐரிஸ் என்ற 83 வயது பெண் எகிப்து நாட்டின் தலை நகரான கெய்ரோவுக்கு வந்துள்ளார். அப்போது, எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞருடன்  பேஸ்புக் குழுவில் அறிமுகமாமி இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஓராண்டு கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எகிப்தில் உள்ள ஷர்ம் எல் –ஷேக் நகரில் தேனிலவும் நடைபெற்றது.

இவர்களின் வயது கடந்த காதல் உலகம் முழுவதும் பரவியது.  பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு,  இரண்டு ஆண்டுகளில் இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர்.

இத்தகவலை ஐரிஸ் சமீபத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், கடந்த 1993 ஆம் ஆண்டு தன் முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், 26 ஆண்டுகளாக அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.