1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (16:18 IST)

ரூ.40,000 கடனை செலுத்தாததால் கணவர் கண்முன் மனைவி பாலியல் பலாத்காரம்; அதிர்ச்சி சம்பவம்..!

ரூ.40,000 வாங்கிய கடனை செலுத்தாததால் கடன் வாங்கியவரின் மனைவியை அவருடைய கண் முன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலம் புனே என்ற பகுதியில்  ஒருவர் ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அவர் திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர் அடியாள் குழுடன் வந்து கடனை கேட்டுள்ளார். 
 
தன்னிடம் பணம் இல்லை விரைவில் கொடுத்து விடுகிறேன் என்று கூறிய நிலையில் அதைக் கேட்காமல் கணவரின் கண் முன்னே கத்தி முனையில் அவருடைய மனைவியை கடன் கொடுத்தவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
 
கடந்த பிப்ரவரி மாதம் அவர் வட்டி இல்லாமல் பெற்ற 40000 கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதால்  இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கடன் கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva