வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (19:18 IST)

அதிமுக சின்னத்தை முடக்க வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்! நீதிமன்றம் உத்தரவு

ADMK
தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றறத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜெஜெ கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து அக்கட்சிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினேன். இதுவரை எந்தப் பதிலும் இல்லை, அதனால் என் மவுஐ பரிசீலித்து, அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேன்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த் வழகு இன்று  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தலைமை நீதிபதி முனீஸ்வரன், இந்த வழக்குப் பத்திரிக்கை செய்தியின் அடிப்படையின் மனுதாரர் தொடர்ந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம் என நீதிபதி உத்தரவிட்டார்.