1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 26 மே 2023 (18:18 IST)

விமானம் தரையிறங்கும்போது அவசரகால கதவை திறந்த பயணி கைது!

Flight
தென்கொரியாவில் விமானம் தரையிறங்கும்போது அவசர கால கதவை திறந்த பயணி  ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்கொரியா நாட்டில் ஜெஜூ தீவில் இருந்து 194 பயணிகளுடன் இன்று ஆசியானா ஏர்லைன்ஸ்  நிறுவனத்தின் விமானம்    ஒன்று புறப்பட்டது.

அப்போது, டேகு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது, பயணி ஒருவர் திடீரென்று விமானத்தின் அவசரகால கதவை திறந்தார்.

ஆயினும்  விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இதில், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அருகிலுள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனனர்.

கதவை திறந்த 39 வயதுள்ள நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.