செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (12:00 IST)

நடுவானில் விமானத்தில் விழுந்த ஐஸ்கட்டி! – நூலிழையில் தப்பித்த பயணிகள்!

கோஸ்டாரிகாவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின்மீது ஐஸ்கட்டி விழுந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

அமெரிக்கா அருகே உள்ள கோஸ்டாரிகா தீவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான போயிங் 777 விமானம் ஒன்று 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு சான்ஜோஸ் நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது விமானம் பறக்க தொடங்கி சில நிமிடங்களில் வானத்திலிருந்து ஒரு கனமான ஐஸ்கட்டி விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விழுந்து கண்ணாடி உடைந்துள்ளது.

உடனே உஷாரான விமானிகள் விமானத்தை அருகே உள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கும் மேலே பறந்த மற்றொரு விமானத்திலிருந்து இந்த ஐஸ்கட்டி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.