1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Britain announced india vaccination not calculated as it terms

தடுப்பூசி போட்டிருந்தாலும் செல்லாது..! – பிரிட்டன் அறிவிப்பால் இந்திய மக்கள் அதிர்ச்சி!

World
இந்திய பயணிகளுக்கு பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கோரொனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்ல இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பது அவசியம் என்பதால் பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் அவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்களாகவே கருதப்படுவர் என கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2 முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ள நிலையில் பிரிட்டன் செல்ல திட்டமிட்டுள்ள மாணவர்கள், மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பெரும்பான்மை இல்லனாலும் பதவிக்கு ஆபத்து இல்ல - கனடா தேர்தல் சுவாரஸ்யம்!