வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (09:46 IST)

அக்காவின் திருமணம்: போதையில் தங்கை செய்த அலப்பறை

அக்காவின் திருமணத்தின் போது தங்கை குடித்துவிட்டு செய்த அலப்பறையால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
பிரிட்டன் நாட்டில் பெண் ஒருவருக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு செம போதையில் வந்த மணமகளின் தங்கை ரகளையில் ஈடுபட்டார். அங்கு இருந்தவர்களோடு சண்டையிட்டார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை அந்த போதை பெண்மணி காலால் எட்டி உதைத்துள்ளார். இதனையடுத்து போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். போதை தெளிந்த பிறகு அந்த பெண் போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் போலீஸார் அவரிடமிருந்து அபராதம் வசூலித்து அப்பெண்ணை எச்சரித்து அனுப்பினர்.