வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (06:03 IST)

போனிகபூரிடம் துபாய் போலீஸ் திடீர் விசாரணை

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்த நிலையில் அவருடைய உடல் இன்னும் மும்பைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் உள்ளது.

பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வந்துவிட்ட போதிலும், துபாய் போலீசார் ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணையை இன்னும் முடிக்காததால் ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு துபாய் நேரப்படி 10.40 மணிக்கு துபாய் போலீசார் போனிகபூரை வரவழைத்து விசாரணை செய்தனர். அவரிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவர் கூறிய பதிலை அறிக்கையாக பதிவு செய்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளது.

துபாய் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வெகுவிரைவில் ஸ்ரீதேவி உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து கொண்டு வருவதாகவும் துபாய்க்கான இந்திய தூதார் நவ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.