வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (09:14 IST)

அணையாத அமேசான் காட்டுத் தீ: திணறும் அரசாங்கம்!

அணையாத அமேசான் காட்டுத் தீ: திணறும் அரசாங்கம்!
பொலிவியா நாட்டில் அமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு அரசாங்கம் திண்டாடி வருகிறது. 
 
உலகிற்கே 20% மழை கொடுக்கும் அமேசான் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவி லட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகியது. அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் ஈடுபட்டது. 
 
மேலும் ஹெலிகாப்டர் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் அமேசான் காட்டி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றாக இருந்தது. 
அணையாத அமேசான் காட்டுத் தீ: திணறும் அரசாங்கம்!
இந்நிலையில், பொலிவியா நாட்டில் 3800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனத்தில் இன்னமும் தீ பற்றி எரிந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீ நாளுக்கு நாள் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிரது பொலிவியா அரசு. 
 
ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள அரசுக்கு, இந்த காட்டு தீ மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து உதவி பெற்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்தாலும், பிற நாடுகளிடம் இருந்து உதவியை கோரியுள்ளது.