குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் பறவை: மனித இனத்திற்கு வெட்க கேடு!
அமெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா கடற்கரையில் ப்ளாக் ஸ்கிம்மர் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஒன்றி ஊட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வைரலவாதோடு மனிதர்களின் மோசமான முகத்தையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது.
சிகரெட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன. கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல மற்ற உயிரினங்களுக்கானதும் என்பதை மறந்து மனிதர்கள் சுற்று சூழலை மோசமாக்கி வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை எடுத்த கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து "நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.