1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (16:01 IST)

மணப்பெண்ணுடன் நடனமாடும் நாய் ! செம வைரல் வீடியோ

மனிதனின் முக்கியமான வளர்ப்புப் பிராணிகளில் முதலிடம் பிடிப்பது என்றுமே நாய்கள்தான். சில சமயங்களில் வீட்டில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருக்கும் போது, வீட்டிலுள்ள குழந்தைகளை கண்ணும் கருத்துமாக நாய்கள் பார்த்துக்கொள்வதில் எத்தனையோ வீடியோக்களில் பார்த்திருப்போம். அதுமட்டுமா வீட்டில் எந்நேரமும் விசுவாசமுள்ள காவல்காரனாகவும் நம் வீட்டு செல்ல நாய்கள் இருக்கின்றன. அதைக் கொஞ்சுக் குழாவுவதில்தான் என்றுமே மக்களுக்கு  ஆனந்தம்தான்.
அப்படித்தான், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இளம்பெண் சாரா கார்சன் என்பவர் தன் வீட்டில் செல்லமாக ’மம்மி ’என்ற பெயர் கொண்ட ஒரு நாயை  வளர்த்து ’வருகிறார்.
 
அப்பெண் அமெரிக்காவில் உள்ள பிரபல செலிபிரிட்டி நாய்களுக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில் சாரா கார்சனின் திருமணத்திற்குத்தான், அவரது நாய் ’மம்மி ’டான்ஸ் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
பின்னர் சாராவும், மம்மியுடன் ஆடினார். இந்த நடனத்தை ஒருவர் படம் படித்து , அதை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட..அப்பப்பா செம வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.