கொரோனா போல இன்னொரு வைரஸ் வரும்..! – பீதியை கிளப்பும் பில்கேட்ஸ்!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் புதிய வைரஸ் உருவாக உள்ளதாக பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளது.
விரைவில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முழுவதுமாக குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பில் கேட்ஸ் “உலகளவில் கொரோனா பரவல் ஆபத்து குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா மட்டுமே இறுதியானது அல்ல. கொரோனாவை போல மற்றொரு பெருந்தொற்று தாக்கும் அபாயம் உள்ளது” என அவர் பீதியை ஏற்படுத்தியுள்ளார்.