திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (22:23 IST)

இங்கிலாந்து மன்னர் பதவியேற்கும் நாளில் வங்கிகளுக்கு விடுமுறை

charles
இங்கிலாந்து நாட்டு ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர்  8 ஆம் தேதி  மறைந்தார்.  இதையடுத்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக அவரது மகன் சர்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.

3 ஆம் சார்லஸ் முறைப்படி வரும் 2023 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி மன்னராகப் பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரமாண்ட முறையில் நடக்கவுள்ள மன்னரின் பதவியேற்பு விழாவிற்காக மே 8 ஆம் தேதி வங்கிகளுக்கு  இங்கிலாந்து அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

எனவே,  3 ஆம் சார்லஸ் பதவியேற்கும் மே 6 ஆம் தேதி முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, மே 8 ஆம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள  நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj