சண்டை போடாமல் ’அன்பு வைத்த’ கணவனை விவாகரத்து கோரிய மனைவி !

dubai
Last Updated: சனி, 24 ஆகஸ்ட் 2019 (16:38 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அதிக அன்புடன் இருப்பது பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் எல்லா பெண்களும், எல்லா ஆண்களும் தங்களுக்கு வரும் கணவன் மற்றும் மனை அன்பானவராக இருக்க வேண்டும் என கடவுளை பிராத்திப்பார்கள்.அப்படி தாங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகத போது, திருமணம் செய்தவரை விவாகரத்து செய்துவிடுவர். 
 
இப்படியிருக்க, ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்,தனது கணவர் தன் மீது அதிகமான அன்பைக் காட்டிவருதை பொறுக்காமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் நீதிமன்றத்தில் அந்தப் பெண் கூறியுள்ளதாவது :
 
நாங்கள் திருமணம் செய்து 1 வருடம் ஆகிறது.  ஆனால் என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடவில்லை. என் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை ஒரு கடுமையான சொல்லைக் கூட சொல்லவில்லை. வீட்டை சுத்தம் செய்யும் போதும் எனக்கு உதவி செய்கிறார். என்னிடம் சத்தம் போட்டு கூட பேசுவதில்லை.  அவரது உடல் பருமனை குறைக்க சொன்ன போது, உடைந்த காலுடன் டயட் இருந்து உடலைக் குறைத்தார். வெளியில் சென்றால் ஏராளமான பரிசுகள் வாங்கி வருகிறார். இப்படியே எத்தனை நாள்கள் வாழ்வது. ?தம்பதிகளுக்குள் சண்டைகள் வேண்டும். அதனால் இவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு கணவர் கூறுகையில் :  திருமணம் ஆகி ஒருவருடம்தான் ஆகிறது. அதனால் அதற்குள் அனைத்தையும் கற்க முடியாது. நான் தவறுகள் செய்திருந்தால் அதை சரிசெய்ய தயார். எங்களுக்கு விவாகரத்து வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :