மகிழ்ச்சியின் உச்சத்தில் ஓரின சேர்க்கையாளர்கள்!! என்ன நடந்தது தெரியுமா?
ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகள் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கின.
அதை முன்னுதாரணமாக காட்டி 2009-ம் ஆண்டு ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சிறிது காலத்திலே அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.