வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (12:20 IST)

இப்படியும் திருமணம் செய்ய முடியுமா? பாராட்டை பெற்ற பீகார் துணை முதலமைச்சர்

பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சரான சுஷில் குமார் மோடி தனது மகனின் திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தி அனைவரது பாராட்டை பெற்றுள்ளார்.
சுஷில் குமார் மோடியின் மகன் உத்காருக்கும், கொல்கத்தாவைச் சேர்ந்த யாமினிக்கும் நேற்று பீகார் கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
 
திருமணத்தின் சிறப்பம்சங்கள்:
 
#மணமகள் எந்த அலங்கார ஆபரணங்களும் அணியவில்லை.
#திருமண ஜோடியினர் மிகவும் எளிமையான ஆடையை அணிந்திருந்தனர்.
#பாட்டுக் கச்சேரி இல்லை.
#மொய் மற்றும் பரிப்பொருட்ககுக்குத் தடை 
#வரதட்சணை வாங்குவதை எதிர்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
#உடல் உறுப்பு தானத்தின் முக்கியதுவத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 
அரசியல்வாதிகளின் திருமண நிகழ்ச்சி என்றாலே ஆடம்பரமாகத் தான் இருக்கும் என்ற கோட்பாட்டை  உடைத்தெறியும் வகையில் நடைபெற்ற சுஷில் குமாரின் இந்த எளியமுறை திருமண நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.