புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (18:25 IST)

ஆஸ்திரேலியாவிற்கு ஆசையாய் கொடுத்த காந்தி சிலை உடைப்பு! – பிரதமர் கண்டனம்!

இந்திய அரசு ஆஸ்திரேலியாவிற்கு அளித்த காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இந்திய அரசு மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கல சிலையை ஆஸ்திரேலியாவிற்கு பரிசளித்திருந்தது. இந்த சிலை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர் பகுதியான ரோவில்லே பகுதியில் உள்ள இந்திய சமூக மையம் அருகே நிறுவப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அங்கிருந்த வெண்கல காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.