திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (10:32 IST)

பூமியை நெருங்கும் சிறிய கோள்… பாதிப்பு குறித்து நாசா விஞ்ஞானிகள் தகவல்!

சூரிய மண்டலத்தில் புதிய ஆஸ்ட்ராய்டு கோள் பூமியை மிக நெருக்கத்தில் சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

1994ல் ஆஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட 7482 என்றழைக்கப்படும் ஆஸ்ட்ராய்டு கோள் ஒன்று பூமியை மிக நெருக்கத்தில் சந்திக்க உள்ளது. இந்த கோள் வருகிற 18 ஆம் தேதி 4.51 மணிக்கு பூமிக்கு நெருக்கமாக 20 லட்சம் கி.மீ தூரத்தில் வர உள்ளது. மணிக்கு 47 ஆயிரத்து 344 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் இந்த கோளால் பூமிக்கு பாதிப்பு குறைவாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல கோள்கள் பூமிக்கு மிக அருகில் வருவது 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வு என்று சொல்லப்படுகிறது.