1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops request to tamil nadu government

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்

ஓபிஎஸ்
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மதுக்கடைகள் திறந்து இருப்பதால் மது பிரியர்கள் மதுவாங்க முண்டியடிப்பதால் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக நேற்று முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளில் 218 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதை அடுத்து பல மதுப்ரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கி உள்ளனர் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்/ இந்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு மதுக்கடைகளை மூட முன் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்!