தொடர்புடைய செய்திகள்
- காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கி கொள்ளையடித்த ஏடிஎம் கொள்ளைக்காரன்
- கடன் தொல்லையை சமாளிக்க மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..
- ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் நடந்த செயின்பறிப்பு: போலீசார் அதிர்ச்சி
- இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் உயிரிழப்பு
- கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக்கொன்ற போலீஸார்
தவறுதலாக தன்னுடைய ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்டு கொண்ட கொள்ளையன்
அமெரிக்காவில் கொள்ளையன் ஒருவன் தவறுதலாக தன்னுடைய ஆணுறுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்
அமெரிக்காவில் உள்ள தெற்கு சிகாகோ பகுதியில் டெரியான் பவுன்சி என்ற 19 வயது இளைஞன் கொள்ளையடிப்பதற்காக ஒரு கடையில் புகுந்துள்ளான். துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துவிட்டு பின்னர் துப்பாக்கியை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளான்.
பின்னர் தப்பியோடும்போது திடீரென எதிர்பாராதவிதமாக பேண்ட் பாக்கெட்டில் உள்ள துப்பாக்கி வெடித்ததால் அதில் இருந்து வெளியேறிய குண்டு அவனுடைய ஆணுறுப்பில் பட்டதால் துடிதுடித்து கீழே விழுந்தான். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் மீது வழக்குப்பதிவு செய்து சிகாகோ போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
