1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (21:02 IST)

காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கி கொள்ளையடித்த ஏடிஎம் கொள்ளைக்காரன்

நாளுக்கு நாள் ஏடிஎம் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து ஏடிஎம்களிலும் காவலாளிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் காவலாளிகளை தாக்கிவிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன



 
 
 நேற்று கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பேங்க ஆப் மகாராஷ்டிரா ஏடிஎம்-இல் முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் பணத்தை கொள்ளையடித்து விட்டு காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட கொள்ளையனை பிடிக்க காவலாளி முயன்றபோதிலும் இறுதியில் காவலாளி பணத்துடன் தப்பித்துவிட்டான்.
 
இதுகுறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. காவலாளி கொடுத்த புகாரின் அடிப்படையில் பனாஜி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.